
இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் இருவரும் காதலித்து திருமணம் கடந்த 2௦14ம் செய்துகொண்டனர் ஆனால் இந்த ஜோடி ஒரு சில மாதங்களில் பிரிந்தனர் இவர்கள் பிரிவுக்கு பல பல காரணங்கள் கூறினார். ஒரு சிலர் அமலாபால் திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்தது என்றும் ஒரு சிலர் தனுஷ் தான் இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தினார் என்றும் கூறினார்கள் ஆனால் சில நாட்களுக்கு முன் விஜய் தன் மனம் திறந்து எங்கள் பிரிவுக்கு என் பெற்றோர்கள் தான் காரணம் என்றார். அதற்கு சில நாட்களில் நீதி மன்றத்தில் இவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து கொடுத்தனர் அதன் பின்னர் ஒரு சில ஊடங்கள் விஜய்க்கு அடுத்த திருமணம் இதனால் மனம் உடைந்தார் அமலாபால் என்ற பொய்யான செய்திகள் வெளியாகின இதற்கு நேற்று இயக்குனர் விஜய் கொடுத்த பேட்டி பின் வருமாறு.
நான் எனது திரை பணிகளில் தீவீரமாக இயங்கி வருகிறேன். இந்த சமயத்தில் சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை.அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்.” இவ்வாறு தெரிவித்தார்.
