Wednesday, February 12
Shadow

படத்தை தயாரித்து நடிக்கும் அமலா பால்

கேரளாவில் பிறந்த நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகானார். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது. அமலா பால் தற்போது முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் நாள் திருமணம் நடைப்பெற்றது. பின்னர் விவகாரத்து ஆனது. இந்நிலையில் அமலாபால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாற முடிவு செய்து, காட்டவீர் (Cadaver) என்ற படத்தில் மருத்துவராக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.