நெட்ஃபிளிக்ஸில் களமிறங்கிய அமலா பால்…!
டிஜிட்டல் மீடியம் பலமாக வளர்ந்து இந்த சூழலில் வட இந்தியாவை போலவே தென்னிந்திய பிரபலங்களும் டிஜிட்டல் மீடியத்தில் களமிறங்கி வருகிறார்கள். OTT எனும் டிஜிட்டல் மீடியத்தில் தற்போது தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்களின் படங்களும், வெப் சீரிஸ்களும் வரிசைகட்டி களமிறங்குகின்றன. இந்த வரிசையில் உலகின் நம்பர் 1 டிஜிட்டல் மீடியமான நெட்ஃபிளிக்ஸில் ஒரு புதிய படத்திற்காக தற்போது அமலா பால் இணைந்திருக்கிறார். ஆந்தாலஜி முறையில் உருவாகும் இப்படத்தில் அமாலா பால் நடிக்கும் பகுதியை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
இது பற்றி நடிகை அமலா பால் தெரிவிக்கையில், கடந்த சில வருடங்களாக நான் மிகவும் வித்தியாசமான சாவால் நிறைந்த காதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ரசிகர்கள் புதிய சிந்தனைக்கு எப்போதும் பெரும் வரவேற்பும் மதிப்பும் தருகிறார்கள். ஆடை படத்திற்கு அவர்கள் தந்த வரவேற்பும் ஆதரவும் மேலும் இன்னும் அதிகமாக ...


