அமலாபால் இயக்குனர் விஜய் திருமண நேரத்தில் தமிழ் சினிமாவே பொறாமை பட்டது என்றால் மிகையாகது,இவர்களின் பொறாமை கொஞ்ச நாட்களிலே பலித்து விட்டது இவர்களுக்குள் விவாகரத்து, அமல பால் ஏற்கனவே விஜய்யுடன் ஏகப்பட்ட பிரச்சனை செய்தாராம். இந்நிலையில் ஜீவனாம்சம் வேறு கேட்டால் விவாகரத்து வழக்கு இழுத்துக் கொண்டே போகும் என்று நினைத்து தான் அவர் எதுவும் கேட்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
காதலித்து திருமணமான இரண்டே ஆண்டுகளில் நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள சூப்பர் ஸ்டார்
அமலாவும், விஜய்யும் சொந்த சகோதரர் போன்று நினைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவர் அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசித் தீர்க்க முயற்சி செய்தாராம். ஆனால் அவர் சொன்னதை அமலா பால் கேட்கவே இல்லையாம்.
விவாகரத்து
விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெறுவதில் அமலா பால் தான் குறியாக உள்ளதாக திரைத்துறையில் விஷயம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அவர் சமரசம் செய்வோரின் பேச்சை கேட்க மறுக்கிறாராம்.
ஏ.எல்.அழகப்பன்
அந்த பொண்ணு யார் சொல்வதையும் கேட்பது இல்லை என்று விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பனும் தெரிவித்திருந்தார். அமலாவுக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் தான் லட்சியமாக உள்ளதாம்.
ஜீவனாம்சம்
அமலா பால் ஏற்கனவே விஜய்யுடன் ஏகப்பட்ட பிரச்சனை செய்தாராம். இந்நிலையில் ஜீவனாம்சம் வேறு கேட்டால் வழக்கு இழுத்துக் கொண்டே போகும் என்று நினைத்து தான் அவர் எதுவும் கேட்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது