Sunday, April 19
Shadow

ஏ.ஆர். ரகுமானுக்கு வெள்ளிவிழா – ஆந்திர அரசு திட்டம்

இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இந்தியாவின் கௌரவம் என்று தான் சொல்லணும் இசை உலகில் அவர் செய்த சாதனை பல உண்டு என்று சொல்லலாம் உலக அளவில் இந்திய இசையின் பெருமையை கொண்டு சென்றவர்.
கடந்த வெள்ளிகிழமை வெளியான அவரின் ஒன் ஹார்ட் படம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த வருடம் அவர் சினிமாவுக்கு வந்து 25வது வெள்ளி விழா ஆண்டு இதை நாம் அனைவரும் கொண்டாடவேண்டும் நம் தமிழக அரசு அதை பற்றி எதுவும் கவலைகூடபடவில்லை

ஆனால் பக்கத்துக்கு மாநிலம் ஆந்திர மாநிலம் அவருக்கு வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளனர் .

ஏ.ஆர். ரகுமானுக்கு வெள்ளிவிழா நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல். 1992-ம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் திரையிசை உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி ரகுமானை கவுரவப்படுத்தும் விதமாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு காக்கிநாடாவில் பிரமாண்ட விழா ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த விழா ரகுமானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் எனவும், அதில் அவருடன் பங்கேற்கும் கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் ஆந்திர அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply