
இயக்குனர் சமுத்திரகனி என்றாலே மிக சிறந்த மனிதர் மட்டும் இல்லை தான் இயக்கும் படங்களும் சரி தான் நடிக்கும் படங்களும் சரி அடுத்தவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் படங்களாக தான் இருக்கும் மக்களுக்கு எதாவது கருத்து சொல்லும் படமாகவும் அதே நேரத்தில் அது வியாபாரரீதியாகவும் இருக்கும் அப்படி சமீபத்தில் வந்து எல்லோரையும் மிகவும் பாதித்த படம் என்றால் அது அப்பா திரைபடம் என்று சொன்னால் அது மிகையாகது. வர்த்தகரீதியாகயாகவும் பெரிய வெற்றி படம் என்றும் சொல்லலாம்.

இந்த படத்தை தற்போது இயக்குனர் சமுத்திரகனி மலையாளத்தில் இயக்க உள்ளார் . அப்பா திரைப்படம் மலையாளத்தில் “ஆகாச மிட்டாய்” என்ற பெயரில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது.
இதில் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், அப்பாவில் நடித்த யுவலட்சுமி, நஷாத் உள்பட பிரபல மலையாள நடிகர்கள் நடிக்க இயக்கம் சமுத்திரக்கனி.

