Monday, November 30
Shadow

அசுரகுரு திரை விமர்சனம் ( பிரமிப்பு) Rank 3.5/5

‘வானம் கொட்டட்டும்’ படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்து வெளியாகியிருக்கும் படம் அசுரகுரு. வருடம் துவங்கி மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது படம்.   புதுமுக இயக்குனர் ராஜ்தீப் இந்த படத்தை இயக்கியுள்ளார். அசுரகுரு படத்தின் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் மற்றும் இவர்களுடன் யோகி பாபு இணைந்துள்ளார் இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

கொரியர் நிறுவனத்தில் வேலைபார்த்தபடியே கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறார் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு.  அப்படி ஒரு கொள்ளையில் ஈடுபடும்போது, ஒரு போதைப் பொருள் தாதாவின் பணத்தையும் திருடிவிட, சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து, காவல்துறை, தனியார் துப்பறிவாளர், போதைப் பொருள் தாதா என எல்லோரும் கதாநாயகனைத் துரத்த ஆரம்பிக்கிறார்கள். கதாநாயகன் ஏன் இப்படி திருடுகிறான், திருடிய பணத்தை என்ன செய்கிறான் என்பது மீதிக் கதை.

ஓடும் ரயிலில் விக்ரம் பிரபு கொள்ளையடிக்கும் காட்சி உடன் படம் அட்டகாசமாக துவங்குகிறது. படத்தில் கதாநாயகனுக்கு ஒரு விபரீத வியாதி. திடீரென தலைகுழம்ப, கண்கள் எல்லாம் சொருக ஆரம்பிக்கும். அவர் திருடினால் மட்டுமே சரி ஆவார். படத்தில் ஜெகன் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

படத்தில் ஹவாலா தொழில் செய்பவராக ஒரு இஸ்லாமியர் வருகிறார். அவருடைய பணமும் திருடு போகிறது. அப்போதிலிருந்து, அவர் யாரைப் பார்த்தாலும் ‘எல்லாத்துக்கும் நீ தான் காரணம்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

படத்தின் பிளஸ்: கொள்ளையடிக்கும் காட்சிக்கள் சூப்பராக இருக்கிறது

படத்தின் மைனஸ் : சொதப்பலான ஸ்கிரீன் பிளே,

மொத்தத்தில் இந்த படம் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரகமே.

CLOSE
CLOSE