Saturday, December 14
Shadow

முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை பலர் முக்கிய நடிகர்கள் படத்தில் நடிக்க அழைத்தும் அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார். அஜித் மற்று விஜய் படங்களில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொன்ன அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். என்பது மிக பெரிய ஆச்சர்யம் என்று கோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply