Saturday, September 24
Shadow

Tag: sasikumar

வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு

வெளியானது நாடோடிகள் குழுவின் அடுத்த பட அறிவிப்பு

Latest News, Top Highlights
நாடோடிகள் 2 படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் அப்படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளது. 2003ஆம் ஆண்டிலேயே இயக்குநராக அறிமுகமானாலும் சமுத்திரக்கனிக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுதந்தது 2009ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் தான். தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதன் பணிகள் நிறைவடைந்து, ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த 26 அன்று இயக்குநர் சமுத்திரக்கனியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்...
சிவகாா்திகேயன் இயக்குனருடன் இணையும் சசிகுமாா்

சிவகாா்திகேயன் இயக்குனருடன் இணையும் சசிகுமாா்

Latest News, Top Highlights
நடிகா் சிவகாா்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா பேன்ற படங்களை இயக்கிய இயக்குனா் பென்ராம். இவா் அடுத்து இயக்க உள்ள படத்தில் நடிகா் சசிகுமாா் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் நடித்த நடிகா் ராஜ்கிரண் இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாா். இந்த படத்தை பிரபலமான சத்யம் சினிமாஸ் நிறுவனம் முதல் முறையாக தாயாிக்க உள்ளது....
மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியுடன் இணையும் சசிகுமார்

மீண்டும் தனது வெற்றிக் கூட்டணியுடன் இணையும் சசிகுமார்

Latest News, Top Highlights
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் சுந்தரபாண்டியன். சசிகுமாரின் திரைப்பயணத்தில் இந்த படம் ஒரு மிக முக்கியமான இடம் பிடித்தது. சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன், தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல், 'சத்ரியன்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரு படங்களுக்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் இணையவிருக்கின்றனர். அதுவும் சுந்தரபாண்டியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவிருக்கிறார்களாம். தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி 'நாடோடிகள் 2' படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் முடிந்த கையோடு 'சுந்தரபாண்டியன்...
நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

நாடோடிகள்-2 குறித்து அஞ்சலி வெளியிட்ட ருசீகர தகவல்

Latest News, Top Highlights
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந...
அசுரவதம் செய்ய தயாரான சசிகுமார்

அசுரவதம் செய்ய தயாரான சசிகுமார்

Latest News, Top Highlights
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் அடுத்ததாக ‘அசுரவதம்’ படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டீசர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அதில் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார். ...
சசிகுமார் – சமுத்திரக்கனியின் திடீர் முடிவு

சசிகுமார் – சமுத்திரக்கனியின் திடீர் முடிவு

Latest News, Top Highlights
இயக்குனர் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நாடோடிகள்’. 9 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க பழைய தோற்றம் வர வேண்டும் என்று சமுத்திரகனி, சசிகுமார் இருவரும் எடையை குறைக்கும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அதன்படி அசைவ, சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள். வேர்கடலை, தேங்காய், இளநீர், கற்றாழை ஜூஸ் போன்ற இயற்கை உணவுக்கு மாறி விட்டார்கள். இது தவிர லாரி டயர்களை உருட்டுவது, பெரிய கயிற்று வடங்களை சுழற்றுவது போன்ற தீவிர உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். “ ‘நாடோடிகள்-2’-ம் முதல் பாகம் போல பேசப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த வித்தியாசமான முயற்சி” என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் அஞ்சலி, அதுல்யா, பரணி, கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ...
நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

நாடோடிகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் "நாடோடிகள் - 2" திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்... இப்படத்தின் போட்டோ ஷுட் திருவள்ளூர் அருகே (26/01/18) அன்று நடைபெறுகிறது... இசை -ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர்- யுகபாரதி, சண்டை பயிற்சி- திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜானி, தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது...
தொடர் தோல்வியால் சொத்துக்களை விற்ற ஹீரோ!

தொடர் தோல்வியால் சொத்துக்களை விற்ற ஹீரோ!

Latest News
ஊர் பேர் ஒன்றை தலைப்பாக வைத்து தனது முதல் படத்தை இயக்கி, அதில் இரண்டாம் ஹீரோவாக அறிமுகமான இந்த தாடி வெச்ச இயக்குநர் கம் ஹீரோ, இயக்குநராக இரண்டாவது படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தவர். அதன் பிறகு தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தினார். நடித்ததில் ஒன்று இரண்டு படம் நன்றாக ஓட, மற்ற படங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்தது. இதனால் தனது சொந்த நிறுவனத்துக்கு ஒரு படம், வெளி நிறுவனத்துக்கு ஒரு படம் என்று நடித்துக் கொண்டிருப்பவர், தான் தயாரித்த படங்களில் ஏற்பட்ட நஷ்ட்டத்தை சமாளிப்பதற்காக சென்னை வாங்கிய சில பிளாட்டுகளை விற்றுவிட்டாராம். இருந்தாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், சினிமாவில் சம்பாதித்தது தானே, மீண்டும் சம்பாதிச்சக்கலாம், என்று தனது நண்பர்களிடம் கூறி வருகிறாராம். இவரின் தோல்விக்கு இவருடன் இருக்கும் நட்பு வட்டாரம் தான் முக்கியமாம் ஒரு சிலர் இவர் செய்யும் தவறை கூட சுப்பர் என்று ...
புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்கும் எடிட்டர் டான் போஸ்கோ

புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்கும் எடிட்டர் டான் போஸ்கோ

Latest News
ஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின் இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் எடிட்டர் டான் போஸ்கோ. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், தற்போது இவர் புதிய படம் ம...
முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

Latest News
சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை பலர் முக்கிய நடிகர்கள் படத்தில் நடிக்க அழைத்தும் அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார். அஜித் மற்று விஜய் படங்களில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொன்ன அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். என்பது மிக பெரிய ஆச்சர்யம் என்று கோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விர...