
அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் ‘ஒன்ஸ் மோர்’… ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!
காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் இசை என அனைத்து அம்சங்களையும் இணைத்து உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். சமீப காலமாக வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலும் நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இசை அமைந்துள்ளது. மலையாளம் மற்றும் தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள ஹேஷாம் அப்துல் வஹாப், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே வெளியாகியுள்ள ‘இந்திரா’ மற்றும் ‘வா கண்ணம்மா’ பாடல்கள் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் பின்னணி இசை மீதும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தொழில்நுட்பக் குழுவிலும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இணைந்துள்ளனர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், ராஜ் கமல் கலை இயக்குநராகவும், நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
முன்னதாக வெளியிடப்பட்ட டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தற்போது வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. காதலை மையமாகக் கொண்டு, பொழுதுபோக்குடன் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இந்த மாதத்தின் முக்கியமான வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது.
பல புதிய அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’, ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

Arjun Das–Aditi Shankar’s ‘Once More’ Officially Set for Worldwide Theatrical Release on August 28
The makers of ‘Once More’, starring Arjun Das and Aditi Shankar, have officially announced that the much-awaited romantic entertainer will hit theatres worldwide on August 28. Along with the announcement, the team has unveiled a brand-new release date poster, further building anticipation among movie lovers.
Produced by Million Dollar Studios and directed by debutant Vignesh Srikanth, Once More promises to be an engaging blend of romance, emotions, and entertainment. The film brings together the fresh on-screen pairing of Arjun Das and Aditi Shankar, while popular model and actress Sona Olickal plays a pivotal role.
One of the film’s biggest highlights is its music, composed by Hesham Abdul Wahab, who makes his debut as a music director in Tamil cinema with Once More. Known for delivering chart-topping soundtracks in films such as Hridayam, Kushi, and Hi Nanna, Hesham’s involvement has significantly raised expectations for both the songs and the background score.
The film’s technical crew includes cinematographer Aravind Viswanathan, production designer Raj Kamal, and costume designer Nava Rajkumar. The project is produced by Yuvraj Ganesan under the banner of Million Dollar Studios.
Earlier, the film’s title teaser received an encouraging response from audiences, while the songs “Indhira” and “Vaa Kannamma” have already become fan favourites. With the official release date now locked, excitement surrounding the film has grown even stronger.
Featuring a promising cast, an acclaimed music composer, and a youthful romantic narrative, Once More is gearing up to entertain audiences across the globe when it arrives in theatres on August 28.
