Tuesday, October 27
Shadow

பொம்மையுடன் போலீஸ் உடையில் அர்ஜுன் தாஸ்… மர்மத்தைத் தூண்டும் ‘ஜான் டோ’ ஃபர்ஸ்ட் லுக்!

பொம்மையுடன் போலீஸ் உடையில் அர்ஜுன் தாஸ்… மர்மத்தைத் தூண்டும் ‘ஜான் டோ’ ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் அர்ஜுன் தாஸ் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாகக் களமிறங்கும் ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. போலீஸ் சீருடையில் கையில் ஒரு பொம்மையுடன் அர்ஜுன் தாஸ் காட்சியளிக்கும் இந்தத் தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ‘ஜான் டோ’ திரைப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்குகிறார். உளவியல் பின்னணியுடன் கூடிய குற்றவியல் திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ், சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளனர்.

ஜான் டோ யார்?

படத்தின் தலைப்பே பல கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. ‘ஜான் டோ’ என்பவர் பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா, காணாமல் போன குழந்தையா அல்லது அடையாளம் தெரியாத நபரா என்ற கேள்விகளை மையமாக வைத்து கதை நகர்கிறது.

தனக்குள் எழும் சந்தேகங்களுக்கு விடை தேடி சந்துரு மேற்கொள்ளும் பயணமே படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என இயக்குநர் மதுமிதா தெரிவித்துள்ளார். உண்மை எது, நம்பப்படுவது எது என்ற குழப்பங்களுக்கு இடையில் கதை பயணிப்பதுடன், பார்வையாளர்களால் எளிதில் கணிக்க முடியாத திருப்பங்களும் திரைக்கதையில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஜான் டோ குறித்த உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றால் என்ன நடக்கும் என்ற கேள்வி கதையின் முக்கியமான புள்ளியாக இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவினர்

இப்படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனிக்கிறார். அஷ்வினி காலே தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

அர்ஜுன் தாஸின் வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்டு, போலீஸ் அதிகாரியாக அவர் தோன்றுவது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள பொம்மை படத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

தலைப்பில் தொடங்கி கதாபாத்திரத்தின் தோற்றம் வரை பல கேள்விகளை எழுப்பும் ‘ஜான் டோ’, திரையில் என்ன மர்மத்தை வெளிப்படுத்தப் போகிறது என்பதே இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Arjun Das Turns Cop for the First Time in ‘John Doe’; First Look Unveils a Gripping Mystery

Actor Arjun Das is all set to take on a new avatar as a police officer for the first time in his career with John Doe. The first look of the upcoming psychological crime thriller has been unveiled, raising curiosity about its intriguing storyline. Featuring Arjun Das in a police uniform holding a doll, the first-look poster hints at a mysterious narrative filled with unanswered questions.

Produced by Shobu Yarlagadda and Prasad Devineni under the banner of Arka Mediaworks, the film is directed by Madhumitha. Known for backing grand cinematic ventures such as the Baahubali franchise, the production house has now joined hands with Arjun Das for this intriguing thriller.

The film features Arjun Das in the lead role as Chandru, alongside Sanjana Natarajan, Srushti, Zara Vineeth Chandok and Neerav in pivotal roles. The story and screenplay have been jointly written by director Madhumitha and Nicholas Chevaillier.

Who Is John Doe?

The very title of the film raises several intriguing questions. Is John Doe a victim, a murderer, a missing child or an unidentified individual whose identity remains unknown? These questions form the central premise of the film, which explores the blurred lines between truth, perception and belief.

According to director Madhumitha, the story follows Chandru as he sets out to find answers to the questions that trouble him. As he delves deeper into the mystery, the distinction between what is known and what is believed begins to fade.

The director also revealed that one of the central questions in the narrative is what happens when nobody is willing to confront the truth about John Doe. The screenplay has been designed to keep audiences guessing, with the mystery unfolding in ways that are difficult to predict.

Technical Crew Behind the Film

The film has cinematography by Preetha Jayaraman ISC, while Mujeeb Majeed has composed the music. Additional musical contributions come from the music collective Artist 404. Vijay Venkatramanan is handling the editing, and Ashwini Kale serves as the production designer.

Arjun Das in a New Avatar

Arjun Das stepping into the role of a police officer for the first time is one of the major highlights of John Doe. His appearance in uniform, coupled with the intriguing image of a doll in his hand, has sparked speculation about the character and its significance in the story.

With an unusual title, a mysterious central character and a psychological crime thriller backdrop, John Doe is generating curiosity among moviegoers. The film’s first look has set the stage for questions about Chandru’s investigation and the truth behind John Doe’s identity.

As anticipation builds, audiences will be eager to discover the mystery that lies at the heart of this upcoming thriller.