
குடும்பத்துடன் கொண்டாட ஒரு கலகலப்பான விருந்து! டிசம்பர் 24-ல் வெளியாகிறது ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு – கிஷோர் ராஜ்குமார் இயக்கி நடிக்கும் படத்தில் அன்னா பென் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமாவில் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து ரசிகர்களை மகிழ்விக்கும் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், இயக்குநரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளைத் தயாரித்து நடத்துவதில் கவனம் பெற்ற நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் அடியெடுத்து வைத்துள்ளது. அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தை கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கிஷோர் ராஜ்குமார், இப்படத்தில் கதாநாயகனாக மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மலையாளத் திரையுலகில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் வெளியான ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
மேலும், கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், CWC மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனுபவம் வாய்ந்த நடிகர்களும் இளம் தலைமுறை கலைஞர்களும் இணைந்துள்ளதால், படத்தின் நட்சத்திரப் பட்டாளம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 நாட்களில் நிறைவடைந்த படப்பிடிப்பு!
படம் குறித்துப் பேசிய இயக்குநரும் கதாநாயகனுமான கிஷோர் ராஜ்குமார், படப்பிடிப்பு வெறும் 29 நாட்களில் நிறைவடைந்ததாகத் தெரிவித்தார். உடல் எடை அதிகமாக உள்ள கதாபாத்திரங்களைப் பொதுவாக நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தும் திரைப்படங்களுக்கு மத்தியில், அத்தகைய உடலமைப்பைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து நாயகனாக உருவாக்கப்பட்டுள்ள படம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தொடக்கம் முதல் இறுதிவரை சிரிப்புக்கும் பொழுதுபோக்குக்கும் பஞ்சமிருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காதலும் நகைச்சுவையும் கலந்த இந்தக் கதையில், உறவுகளுக்கிடையேயான பொருத்தம் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. அதேசமயம், கதாநாயகிக்கும் கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். திறமையான நடிகையான அன்னா பென்னுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், இப்படத்தை இயக்கி நடிக்கும் வாய்ப்பை வழங்கிய நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் குழுவிலும் ‘நாய் சேகர்’ கூட்டணி!
இப்படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளையும் இணை எழுத்துப் பணிகளையும் பிரவீன் பாலு கவனித்துள்ளார். படத்தொகுப்பை ராம் பாண்டியன் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்த ‘நாய் சேகர்’ திரைப்படத்திலும் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம்பெறும் கலகலப்பான பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஸ்ரீ சசிகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கிருத்திகா சேகர் ஆடை வடிவமைப்பையும், எஸ். என். அஸ்ரப் மற்றும் நரேஷ் தினகரன் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளையும் கவனித்துள்ளனர்.
காதல், நகைச்சுவை, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு எனப் பல அம்சங்களுடன் தயாராகியுள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’, நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. கிஷோர் ராஜ்குமார் – அன்னா பென் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘Coimbatore Mappillai’ Set for a Worldwide Theatrical Release on December 24
Kishore Rajkumar’s Romantic Comedy Promises Family Entertainment, Featuring Anna Ben and a Stellar Ensemble Cast
Blending romance, humour and family-friendly entertainment, Coimbatore Mappillai, written, directed by and starring Kishore Rajkumar of Naai Sekar fame, is gearing up for a worldwide theatrical release on December 24. AGS Cinemas will distribute the film across Tamil Nadu.
The film marks the debut production venture of Noise and Grains, a leading media production and talent management company known for successfully conceptualising and organising grand entertainment events featuring prominent personalities from the Indian film industry. Produced by Karthik Srinivas and Mahaveer Ashok under the Noise and Grains banner, the film promises a lively blend of romance and comedy.
Popular Malayalam actress Anna Ben, who also appeared in the Tamil film Kottukkaali, plays the female lead. The film boasts an impressive ensemble cast featuring K. S. Ravikumar, Ponvannan, Viji Chandrasekhar, Sithappu Saravanan, Vinodhini Vaidhyanathan, Lollu Sabha Manohar, CWC Monisha Blessy, WhatsApp Mani and Nakkalites Ranjith, among others.
Kishore Rajkumar Promises Nonstop Entertainment
Speaking about the film, director and lead actor Kishore Rajkumar revealed that the entire shoot was completed in just 29 days. He highlighted how the film takes a different approach to portraying a protagonist with a heavier build, rather than limiting such characters to conventional comic roles.
Expressing his happiness about playing the lead role himself, Kishore Rajkumar said the film has been designed to appeal to audiences across age groups. He added that viewers can expect laughter and entertainment throughout the film, making it an enjoyable experience for families.
Describing the film’s core theme, the filmmaker said that Coimbatore Mappillai is a romantic comedy built around relationships, compatibility and humour. The screenplay has been crafted to deliver a feel-good experience, while also giving considerable importance to the female lead.
Kishore Rajkumar also expressed his happiness about collaborating with the talented Anna Ben and extended his gratitude to Noise and Grains for giving him the opportunity to bring the project to life.
Strong Technical Team Behind the Film
Praveen Balu has handled the cinematography and co-writing responsibilities, while Ram Pandian is in charge of editing. Both technicians previously collaborated with Kishore Rajkumar on Naai Sekar, which starred Sathish in the lead role.
Brindha Master has choreographed a lively song in the film, while Sri Sasikumar serves as the art director. Kiruthika Sekar is the costume designer, and S. N. Asraf and Naresh Dinakaran are the executive producers.
With its mix of romance, comedy and feel-good entertainment, Coimbatore Mappillai marks an important milestone for Noise and Grains as it enters the world of feature-film production. Featuring Kishore Rajkumar and Anna Ben in the lead roles, the film is scheduled to arrive in theatres worldwide on December 24, with AGS Cinemas handling its release across Tamil Nadu.
