
சக்தி வாய்ந்த கதை, சக்திவாய்ந்த குழுவை கவர்ந்தால் சக்தி வாய்ந்த திரைப்படத்தை உண்டாகும். அருள்நிதி- சாரதா ஸ்ரீநாத் நடிக்கும் K-13 படம் மேற்குறிய கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.
இந்த படத்தில் திறமைமையான நடிகர்கள் அருள்நிதி மற்றும் சாராதா ஸ்ரீநாத் இணைப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட முதல், எல்லா வகையான மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், வலுவான கதை கொண்ட படத்தில் நடித்து வருவதால், தமிழகம் முழுவதும் தங்களுக்கென ரசிகர்களை கொண்டுள்ளது. இருந்தபோதும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர்கள் வெளியானது, படத்தை பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது, இந்த படத்தில் முக்கிய வரவாக, மியூசிக் டைரக்டர் சாம் சிஎஸ் இணைந்துள்ளார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் தெரிவிக்கையில், சாம் சிஎஸ் ரசிகர்களை இசையால் கவர்வதுடன், ரசிகர்களுக்கு தேவையான வகையில் இசையமைக்கும் திறமை கொண்டவர். குறிப்பாக, திரில்லர் காட்சிகளில் படம் பார்பவர்களை சீட்டின் நுனிக்கே வர செய்யும் அளவுக்கு இசையால் அதிர வைப்பார். அவரது பிஜிஎம்களும் சிறந்த முறையில் இருக்கும். K 13 திரில்லர் படம் என்பதால், இதில் இவர் தனது திறமையை வெளிபடுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், சாம் சிஎஸ், திரில்லர் மற்றும் ஆக்சன் கொண்ட படங்களுக்கு ஏற்ற இசையமைப்பாளராக மாறி வருகிறார். இது எங்களுக்கு எக்ஸ்டிரா ஆற்றலை கொடுத்துள்ளது. இதுமட்டுமின்றி அருள்நிதி, ஷரத்த ஸ்ரீநாத் மற்றும் பலர் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.
இந்த படத்தில் யோகி பாபு முக்கிய ரோலில் நடித்துள்ளார் தொழில்நுட்ப யூனிட்களில், எடிட்டர் ரூபன், போட்டோகிராபிக் டைரக்டராக அரவிந்த் சிங், ஸ்கிரிப்ட் டாக்டோரிங் மற்றும் சவுன்ட் டிசைன் பணியில் உதய குமார் டி, சண்டை காட்சிகளை சுதீஷ் ஆகியோர் செய்துள்ளனர். இந்த படத்தை எஸ்பி சினிமா பேனரில் எஸ்.பி. சங்கர் மற்றும் சந்தியா பிரியா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
