அருள்நிதியின் “K13” இந்த கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்
நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து கூறும்போது, "டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை...





