‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்திற்கு பிறகு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ப்ரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’. உருவாகியுள்ளது. இது தவிர கைவசம் நிர்மனின் ‘நெஞ்சமெல்லாம் காதல்’, ஆனந்த கிருஷ்ணன் படம் மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ‘மெட்ரோ’ புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் – ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்திற்கு ‘ஆக்ஸிஜன்’ (OXYGEN) என தலைப்பு வைத்திருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஜோகன் இசையமைத்து வரும் இதற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இதன் டீசர் வெளியாக இருக்கிறது.