Sunday, December 8
Shadow

சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நெகட்டிவ் ஷேடில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் தயாரித்து வருகிறார். தற்போது, படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வருகிற ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் நட்சத்திர கலைவிழாவின் போது வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Leave a Reply