நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான உள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் ஆடியோ & டிரைலர் போன்றவிய வரும் 20ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதையடுத்து வரும் மே 1-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வரும் ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.