சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் அப்டேட்
‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. விஷால், சமந்தா ஆகியோரை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார்.
‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் அர்ஜூன், பாலிவுட் நட்சத்திரம் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பொலிட்டிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதியை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் உடனடியாக ஒரு வெற்றி படம் கொடுத்தே தீரவேண்டு...


