Tuesday, April 23
Shadow

பைரவா ரிலீஸ் தடை நீங்கியதா? இல்லையா? உண்மை என்ன?

இளைய தளபதி’ விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தெறி படத்துக்கு பின் அது இன்னும் அதிகரித்துள்ளது. எனவே பைரவா படத்தின் கேரள உரிமம் மட்டுமே ரூ. 7.30 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

ஆனால் கேரளாவில் பைரவா வெளியாவதில் சிக்கல் இருந்தது. கேரளாவில் கடந்த சில நாட்களாக விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வந்தது. மேலும் ஜனவரி 11-ல் இருந்து எந்தவொரு படத்தையும் கேரளாவில் திரையிடக் கூடாது என இளைஞர் காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பைரவா ரிலீஸுக்கு கேரளாவில் தடை வருமோ என ரசிகர்கள் அச்சத்தில் இருந்தனர்.

ஆனால் நேற்று திரைப்படங்கள் வெளியாக கேரளாவில் இருந்த தடை நீங்கிவிட்டதாக சொல்லப்பட்டது. உடனே பைரவா எதிர்பார்த்து போல் ஜனவரி 12-ல் வெளியாக எந்த தடையும இல்லை என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் தடை இன்னும் நீங்கவில்லையாம். இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Leave a Reply