
எனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி ஒருவரின் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் எனது பேத்தியை வசியப்படுத்தி, அந்த மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்து விட்டார்.
அந்த மந்திரவாதி திருமணமானவர். அவரால் எனது பேத்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதுபற்றி நான் நேரிடையாக சென்று மந்திரவாதியிடம் பேசினேன். எனது பேத்தியை விட்டுவிடுமாறு கெஞ்சினேன். ஆனால் அந்த மந்திரவாதி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து தவறாக பேசினார்.
பாபிலோனாவை சிறைவைத்துள்ள மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே பாபிலோனாவை குறிப்பிட்ட மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்கவேண்டும். மந்திரவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு பாபிலோனா பாட்டியின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘தை பொறந்தாச்சு’, என்னம்மா கண்ணு’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்கள் ஏற்று நடித்தவர் நடிகை பாபிலோனா.



