
மனைவியின் இழப்பைத் தாண்டி மீண்டும் கலைப்பணியில்… ‘ரஞ்சன் அட்வகேட்’ டப்பிங்கில் பங்கேற்ற நடிகர் முத்துக்காளை!
சமீபத்தில் தனது மனைவியை இழந்த சோகத்தில் இருந்த நடிகர் முத்துக்காளை, அந்த வேதனையிலிருந்து சற்றே மீண்டு மீண்டும் தனது கலைப்பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து, நடிகர் தியாகராஜன் இயக்கி வரும் ‘ரஞ்சன் அட்வகேட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் முத்துக்காளை இன்று நிறைவு செய்தார்.
இதற்கிடையில், மனைவியின் மறைவால் துயரத்தில் இருந்த முத்துக்காளையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த இயக்குநர் தியாகராஜன், டப்பிங் பணிகள் முடிந்த பின்னரும் அவரை உற்சாகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டப்பிங் காட்சிகளைப் பார்த்த தியாகராஜன், “மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள். இந்தப் படத்தின் மூலம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்று முத்துக்காளையை பாராட்டியதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் கடினமான தருணத்தை எதிர்கொண்ட போதிலும், தொழில்முறை அர்ப்பணிப்புடன் மீண்டும் திரைப்பணிகளில் ஈடுபட்டுள்ள முத்துக்காளையின் இந்த முயற்சி, திரையுலகினர் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Back to Work After Personal Loss: Actor Muthukalai Completes Dubbing for ‘Ranjan The Advocate’
Actor Muthukalai, who recently suffered the loss of his wife, has gradually returned to his professional commitments, showing remarkable dedication to his craft despite the difficult phase in his personal life.
The actor completed dubbing for his portions in the upcoming film Ranjan The Advocate, starring Prashanth and directed by Thiagarajan.
Following the tragic loss in Muthukalai’s family, director Thiagarajan had personally met him to offer his condolences and support. After the dubbing session, Thiagarajan reportedly appreciated Muthukalai’s performance and encouraged him with words of praise.
“You have performed very well. This film will earn you a good name,” Thiagarajan is said to have told the actor after reviewing his work.
Muthukalai’s decision to return to work and fulfill his professional responsibilities during such a challenging period has earned admiration from members of the film industry and well-wishers alike.
