
தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. எனினும் தமிழகம் மற்றும் கேரளாவில் விமர்சனங்களையும் தாண்டி இப்படம் வசூலில் மிரட்டி வருகிறது.
மேலும் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் படம் இவ்வளவு விரைவில் 100 கோடி வசூல் செய்வது இதுவே முதல்முறை.
ஆனால் உண்மையில் இப்படம் 100 கோடி வசூல் செய்யவில்லை எனவும் ஆனால் எப்படியும் அந்த வசூலை படம் எட்டிவிடும் என்றும் சில விநியோகஸ்தர்கள்கூறிவருகிறார்கள். இது பொய்யான விளம்பரத்தை தயாரிப்பாளர் கொடுத்துள்ளார் என்பது தான் உண்மை அடிப்படையில் இந்த படம் தமிழக முழுதும் ஏன் இந்தியா முழுதும் எத்ததனை அரங்கத்தில் வெளியாகியுள்ளது நான்கு நாளில் 1௦௦ கோடி வசூல் செய்வதற்கு இந்தி படங்களே மிகவும் கஷ்டபடுகிறது தமிழ் படம் தன் நாட்டில் மட்டும் தான் பெரிய அளவில் வெளியாகிறது ஆனால் இந்தி படங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அது மட்டும் இல்லாமல் உலகில் எல்லா நாட்டிலும் வெளியாகிறது அப்படி பட்ட படங்களே நான்கு நாளில் சாதிக்க முடியாததை தமிழ் படம் முடியுமா இது ரசிகர்களை ஏமாற்றும் விஷயம் பைரவா பொறுத்தவரை அமெரிக்க மற்றும் மலேசியாவில் படு தோல்வி அப்படி இருக்கும் போது எப்படி நூறுகோடியை தொடமுடியும் .
