
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழில் உள்ள சொல்லெடுத்து பாடல்கள் உருவாக்கி புது உயிர் படைத்து கொண்டிருப்பவர். இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா, அதிதி மற்றும் பலர் நடிக்கும் சந்தனதேவன் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து யுவன் நீங்கள் முன்பு போல் இல்லை. போன் செய்தாலே அடுத்த நாள் தான் எடுப்பீர்கள். உங்களது திறமை எனக்கு தெரியும். இன்னும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.
வாய்ப்பிருக்கும் போதே கடுமையாக உழைத்தால் நிச்சயம் அடுத்த கட்டம் செல்வோம் என கூறினார். நானும் இளைய ராஜாவும் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளோம். சில படங்களுக்கு ஒரே நாளில் அவர் இசையமைத்துள்ளார். சினிமாவில் இருக்கும் எல்லோரும் இரண்டு மடங்கு உழைக்க வேண்டும். இது பலரிடம் இல்லை. 3 நாட்கள் ஓடும் படத்திற்கு 300 நாட்கள் இசையமைக்க கூடாது என அவர் கூறினார்.