
பொதுவாக தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் அதிகம் வெளியாகிறது எப்போதாவது ஒரு முறை தான் சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகும். அப்படி வெளியாகும் ஒரு சில படங்கள் மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெரும் அந்த வகையில் தாவது நாளை வெளியாக உள்ள பக்ரீத் திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவரும் படமகா இருக்கும் என்பதில் எந்த ஒரு வித ஐயமில்லை என்று கூறலாம்
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகர் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்க கூடியவர் விக்ராந்த் ஆனால் அவருக்கு பல வருடங்களாக ஒரு நல்ல படம் கதை அமையவில்லை என்று தான் சொல்லணும் அந்த குறையை தீர்க்க வந்துள்ள ஒரு படம் தான் இந்த பக்ரீத். அந்த வாய்ப்பையும் மிகவும் சரியாக பயன் படுத்தியுள்ளார் என்று தான் சொல்லணும்.
இந்த படத்தில் நாயகனாக விக்ராந்த் நாயகியாக வசுந்தரா, மோக்லி,ரோகித் பதக் ,எம்.எஸ். பாஸ்கர், ஷ்ருத்திகா மற்றும் பலர் நடிப்பில் இமான் இசையில் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் இந்த படம் பக்ரீத்
கமர்ஷியல் மசாலாக்கள் அதிகம் சேர்க்காத தமிழ் சினிமா. நல்ல படங்களின் வரிசையில் ‘பக்ரீத்.’
விவசாயத்தின் மீது பிரியமுள்ள நாயகனுக்கு காலச்சூழலால் ஒட்டகத்தின் மீது பாசம் தாவுகிறது. அந்த பாசம் அவனுக்கு தந்த லாப – நஷ்டம், இன்ப துன்பமே கதை.
ஒட்டகத்தை முதன்மை கதாபாத்திரமாக்கியிருப்பது புதுமை. ‘சாரா’ என்ற அந்த ஒட்டகம் கதையை உள்வாங்கி நடித்தது போலிருக்கிறது. அந்தளவுக்கு ஒட்டகத்தைப் பழக்கியிருக்கிறார்கள். ஒட்டகத்தின் சாதாரண அசைவுகள் கூட ஒளிப்பதிவின் நேர்த்தியால் நடிப்பாகத் தெரிகிறது.
நாயகன் விக்ராந்த் அலட்டலில்லாத நடிப்பால் கவர்கிறார்.
நாயகனின் மனைவியாக வசுந்தரா, மகளாக பேபி ஷ்ருத்திகா, அண்ணனாக ராஜசிம்மன், நண்பனாக தினேஷ், கால்நடை மருத்துவராக எம்.எஸ். பாஸ்கர்… எவர் நடிப்பிலும் இயல்பு மீறல் இல்லை!
டி. இமான் இசையில் பாடலாசிரியர் ஞானகரவேலின் ‘லக்கி லாரி’ பாடல் உற்சாகம், ‘கரடுமுரடு’ பாடல் இதம்! கதைன் ஓட்டம் புரிந்து சிறந்த பின்னணி இசை மூலம் படத்தை மேலும் மெருகு ஏற்றியுள்ளார் இசையமைப்பாளர் இம்மன் இன்னும் சொல்லபோனால் படத்தின் வெற்றியை தாங்கி பிடித்துள்ளார்.
காட்சியமைப்பில் சிலபல குறைகள் தென்பட்டாலும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிடுகிறது ஒட்டகத்தின் மீது படம் பார்ப்பவர்களுக்கு பாசம் ஏற்படும்படியான திரைக்கதை!
மொத்தத்தில் பக்ரீத் நல்ல விருந்து Rank 4/5
