
சிரஞ்சீவி கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார்.

பின்னர் ஆகஸ்ட் 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார் ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்
இவர் நடித்த படங்கள்: சயீரா நரசிம்ம ரெட்டி
