Monday, February 17
Shadow

பேச்சலர் 3ம் போஸ்டர் ரிலீஸ்

இசை மறுபக்கம் நடிப்பு, இதனிடையே சமூக சேவை என பிஸியாக இருக்கிறார் யங் சாக்லேட் பாய் ஜீ.வி பிரகாஷ்.

இவர் அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வ பிரகாஷ் இயக்கத்தில் ‘Bachelor’-ங்கற் படத்தில் நடித்து வருகிறார். ரொமாண்டிக் கதையான இப்படத்தை Axess Film factory பேனரில் ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடிக்கிறார். ஜீ.வி பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், சான் லோகேஷ் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

முன்னதாக இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில், பெண்ணின் கால்களுக்கு இடையில் தலை சாய்த்து ஜீ.வி பிரகாஷ் படுத்திருப்பது போல போஸ்டர் அமைந்திருந்துச்சு.

இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இவர் அடல்ட் மூவிஸ் மட்டும் தான் நடிப்பாரு போல என்று ஜீ.வி பிரகாஷை இணையத்தில் பலரும் முகம் சுளிக்கு வகையில் கமெண்ட் அடிச்சாய்ங்க .

அப்பாலே நியூ இயரைமுன்னிட்டு வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டர், அதேமாதிரி இருந்தாலும், திட்டும் அளவுக்கு மோசமாக இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அடிச்சாய்ங்க..

அதை எல்லாம் மனசில் வச்சோ என்னவோ லவ்வர்ஸ் டே-யான இன்னிக்கு புது போஸ்டர் ஒண்ணு ரிலீஸாகி இருக்குது.. அதுலே கைக் கட்டோட மதுவும் காதலும் உடலுக்கு கேடு விளைவிக்கும்-முன்னு கமெண்டோட வந்துருப்பது ட்ரெண்டாகி வருது