Monday, February 17
Shadow

இளைஞர்களின் ஆரவாரத்தில் “ஓ மை கடவுளே”

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் இன்னிக்கு வெளியாகி உள்ள படம் ஓ மை கடவுளே.

இந்த படத்தில் இயக்குநராக கெளதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும், மாஸ்டர் படத்தில் வில்லனாக மிரட்டியுள்ள விஜய்சேதுபதி ஓ மை கடவுளே படத்தில் அந்த கடவுளாகவே நடிச்சிருக்கார்.

நாலு படம் ரிலீஸாக திட்டமிட்டடிருந்த சூழலில் இன்னிக்கு வெளியான இந்த ஓ மை கடவுளே படத்திற்கு மட்டும் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்குது. படத்தை பார்த்த பலரும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி திரைப்படமான இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வைத்து வருகின்றனர்.

இயக்குர் அஷ்வத் மாரிமுத்து ஏற்கனவே நமக்கு கொடுத்த பெட்டியில் படம் நிச்சயம் இளைஞர்களை கவரும் என்று சொன்ன வார்த்தையை இன்று இந்த உறுதி செய்துவிட்டது. படம் பார்த்தவர்கள் அனைவரும் இயக்குனரையும் குறிப்பாக ஹீரோ அசோக் செல்வன் மற்றும் நாயகி ரித்திகா சிங் இருவரையும் பாராட்டி வருகிறார்கள் .காதலர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும கூறிவருகிறார்கள்

கூடவே படத்தை ரிலீஸ் செஞ்சிக்குக்கும் சக்தி ஃபிலிம்ஸ் கூட ’நம்ம கம்பெனி ரிலீஸ் செஞ்சா அது ஹிட்’ன்னுதான்னு ஃபுரூவ் ஆயிடுச்சு-ன்னு ட்விட் போட்டு ஹேப்பியாகி இருக்காங்க