Friday, July 31
Shadow

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் வீர ராணி பெலவாடி மல்லம்மாவாக பூமி பெட்னேக்கர்! – நட்சத்திர அணி மேலும் வலுவடைகிறது

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் வீர ராணி பெலவாடி மல்லம்மாவாக பூமி பெட்னேக்கர்! – நட்சத்திர அணி மேலும் வலுவடைகிறது

இந்திய திரையுலகில் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பாக உருவாகி வரும் ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படம், அதன் நட்சத்திரப் பட்டியலால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும் இணைத்து உருவாகும் இந்தப் படத்தில் தற்போது பாலிவுட்டின் திறமையான நடிகை பூமி பெட்னேக்கர் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில், கர்நாடக வரலாற்றில் வீரத்திற்கும் மன உறுதிக்கும் அடையாளமாகப் போற்றப்படும் பெலவாடி மல்லம்மா என்ற வீர ராணி கதாபாத்திரத்தில் பூமி பெட்னேக்கர் நடிக்கிறார். வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற இந்தக் கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற மராத்தா பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் கதாபாத்திரத்தில் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள நிலையில், அவருடன் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். ஒவ்வொரு புதிய அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த வாய்ப்பு குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்த பூமி பெட்னேக்கர் கூறுகையில்,

“சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பெருமை. கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மாவை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. ‘காந்தாரா’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை மிகவும் ரசித்துள்ளேன். இயக்குநர் சந்தீப் சிங் இந்தக் கதையை என்னிடம் விவரித்தவுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் சம்மதித்தேன். நான் இதற்கு முன் நடித்த எந்தக் கதாபாத்திரத்தையும் விட இது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும். இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சந்தீப் சிங் இயக்கி தயாரித்து வரும் இந்த திரைப்படம், இந்திய வரலாற்றை உலக அரங்கில் புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. மிக உயர்ந்த தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாகும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய வரலாற்றுப் படைப்புகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். இசையை அமித் திரிவேதி அமைத்துள்ள நிலையில், தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல்களை எழுதியுள்ளார். உலகளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’, இந்திய வரலாற்றின் புகழ்மிக்க வீர மன்னரின் வாழ்க்கையையும், அவருடன் வரலாற்றில் அழியாத தடம் பதித்த வீரர்களின் கதைகளையும் பிரம்மாண்டமாக திரையில் கொண்டுவரும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

 

Bhumi Pednekar Joins The Pride of Bharat: Chhatrapati Shivaji Maharaj as the Fearless Warrior Queen Belawadi Mallamma

The star-studded cast of The Pride of Bharat: Chhatrapati Shivaji Maharaj, one of the most ambitious historical epics in Indian cinema, continues to expand with the addition of acclaimed actress Bhumi Pednekar. Bringing together celebrated actors and globally renowned technicians, the film is shaping up to be a landmark cinematic spectacle.

Bhumi Pednekar has officially joined the cast to portray Belawadi Mallamma, the legendary warrior queen of Karnataka, remembered for her unmatched courage, resilience, and indomitable spirit. Her inclusion adds further strength to the ensemble led by Rishab Shetty, who headlines the film as the iconic Maratha warrior king Chhatrapati Shivaji Maharaj. The cast also features Arjun Rampal, Vivek Oberoi, and several other prominent actors in pivotal roles.

Expressing her excitement about being part of the project, Bhumi Pednekar said:

“It is an incredible honour to be part of the first Indian cinematic spectacle of this scale based on the life and legacy of the great Maratha warrior king, Chhatrapati Shivaji Maharaj. Playing Belawadi Mallamma, the fearless warrior queen of Karnataka, and bringing her story to life on screen is truly a privilege. I have always been a huge fan of Kantara, and Rishab Shetty’s phenomenal performance left a lasting impression on me. The moment Sandeep narrated the story, the actor in me instantly said yes. This is unlike any role I have played before, and I am deeply grateful to the producers for seeing me in a completely new light and entrusting me with this extraordinary character.”

Directed and produced by Sandeep Singh, The Pride of Bharat: Chhatrapati Shivaji Maharaj is being mounted on a grand scale and is poised to become one of the biggest historical films ever made in India. The film aims to bring the extraordinary life, leadership, and legacy of the legendary Maratha ruler to audiences through a visually spectacular cinematic experience.

Planned as a two-part epic, the screenplay has been written by Rishi Virmani, with music composed by Amit Trivedi. National Award-winning lyricist Prasoon Joshi has penned the songs. Featuring an impressive ensemble of acclaimed actors and internationally recognised technicians, the film is scheduled to begin principal photography later this year. Extensive pre-production work is currently underway to bring this monumental historical saga to life.