Wednesday, April 22
Shadow

பிக் பாஸ் 2 முதல் வாரம் வெளியேறபோவது யார் கசிந்த உண்மை

முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் இது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது.

இருப்பினும் முதலில் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரை வெளியேற்ற உள்ளார்கள் என்ற ரகசிய தகவல் தற்போது கசிந்துள்ளது. ஆம் அடுத்த வாரத்தில் வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்பது கசிய தொடங்கியுள்ளது.

பிரபல பாடகரான ஆனந்த் வைத்தியநாதன் யாருடனும் பேசாமல் பழகாமல் தனிமையிலேயே இருப்பதால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் குழுவினரும் இதே எண்ணத்தில் தான் இருப்பதாக தகவல்கள் லீக்காகி உள்ளன.

என்ன நடக்க போகிறது? முதலில் வெளியேற போகும் அந்த போட்டியாளர் யார் என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.