Wednesday, October 28
Shadow

இந்த வாரம் பிக் பஸ் வீட்டை விட்டு போக போவது யார் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் வனிதாவைத்தான் அனைவரும் வில்லியாக பார்த்து வருகிறோம். ஆனால் வனிதா வாயாடியாக இருந்தாலும் அவரிடம் ஒரு சின்ன வெகுளித்தனமும் இருக்கும். வந்த சண்டையை விடமாட்டாரே தவிர அவரிடம் நரித்தனமாக எண்ணங்கள் இல்லை. ஆனால் மீராமிதுன் அப்படியில்லை.

பிக்பாஸ் வீட்டில் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து அவர்களின் இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும் தந்திரத்தை கையாண்டு வருகிறார். இதற்காக அவர் தற்போது வனிதா டீமை பகடைக்காயகவும் பயன்படுத்தி வருவது போல் தெரிகிறது.

லாஸ்லியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதை அறிந்து கொண்ட மீரா, அவரை நாமினேட் செய்ததோடு, அவரிடம் நட்பு குறித்து விளக்கம் அளித்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். ஆனால் மீராவின் தந்திரத்தை சரியாக புரிந்து கொண்ட லாஸ்லியா, மீராவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியை தரக்கூடியவர் என்று கூறப்படும் சேரனை மீரா அடுத்த டார்கெட்டாக வைத்துள்ளார். சாதாரண ஒரு காரணத்திற்காக சேரனை வம்புக்கு இழுத்து அவரை டென்ஷனாக்கியுள்ளார். இந்த காட்சியை பார்ப்பவர்கள் சேரன் கோபக்காரர் என்ற இமேஜை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருக்கலாம், அல்லது பிக்பாஸ் டீமின் திரைக்கதையின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம்.

அதே போல இந்த எரிக்சன் யார் தெரியுமா மோகன் வைத்தியா தான் என்று சொல்ல படுகிறது அதோடு நேற்று டாக்ஸயில் தொற்ற மோகன் வைத்தியாவை பலர் கிடல் செய்யும் போது மோகன் வித்தியாவின் நெருங்கிய நண்பர் சாண்டி டே அவரே இன்னும் நாலு நாள் தான் இருக்க போறாரு அவரை போய் விடுங்க டா என்று கூறினார் இதன் மூலம் அவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு போகபோகிறார் என்று கிசுகிசுக்க படுகிறது