
இந்த வாரம் பிக் பஸ் வீட்டை விட்டு போக போவது யார் தெரியுமா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் வனிதாவைத்தான் அனைவரும் வில்லியாக பார்த்து வருகிறோம். ஆனால் வனிதா வாயாடியாக இருந்தாலும் அவரிடம் ஒரு சின்ன வெகுளித்தனமும் இருக்கும். வந்த சண்டையை விடமாட்டாரே தவிர அவரிடம் நரித்தனமாக எண்ணங்கள் இல்லை. ஆனால் மீராமிதுன் அப்படியில்லை.
பிக்பாஸ் வீட்டில் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து அவர்களின் இமேஜை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கும் தந்திரத்தை கையாண்டு வருகிறார். இதற்காக அவர் தற்போது வனிதா டீமை பகடைக்காயகவும் பயன்படுத்தி வருவது போல் தெரிகிறது.
லாஸ்லியாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதை அறிந்து கொண்ட மீரா, அவரை நாமினேட் செய்ததோடு, அவரிடம் நட்பு குறித்து விளக்கம் அளித்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். ஆனால் மீராவின் தந்திரத்தை சரியாக புரிந்து கொண்ட லாஸ்லியா, மீராவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
தற...