
ரத்தக்கறை படிந்த அரிவாளும்… கண்கள் கட்டப்பட்ட மர்ம மனிதரும்! ‘ஸ்லம் டாக்’ டீசருக்கு முன்பே பரபரப்பை கிளப்பிய விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணி!
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலக ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக மாறியுள்ளது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்துள்ள ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம்.
படத்தின் டைட்டில் அறிவிப்பிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பான்-இந்தியா திரைப்படம் தற்போது அதன் அடுத்த கட்ட புரமோஷன் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டீசர் வெளியீட்டு அறிவிப்புடன் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒரு நபரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் கதைக்களம் எவ்வளவு இருண்டதும், வன்முறை நிறைந்ததுமாக இருக்கப் போகிறது என்பதற்கான சுட்டிக்காட்டாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அந்த மனிதர் யார்? அவருக்குக் காத்திருக்கும் விதி என்ன? என்ற கேள்விகளையும் ரசிகர்களிடம் எழுப்பியுள்ளது.
தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல், மாஸ் ஆக்ஷன் திரைப்படங்களின் வல்லுநராக அறியப்படும் பூரி ஜெகன்நாத் தனது வழக்கமான பாணியை விட வித்தியாசமான கதை சொல்லல் முறையை இந்த படத்தில் கையாண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அனுபவம் மிக்க நடிகை தபு மற்றும் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கிய பங்குகளை வகித்துள்ளனர்.
இசை உலகில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ள தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற திரைப்படங்களில் அவரது பின்னணி இசை பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.
மர்மம், ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையில் உருவாகியுள்ள ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் டீசரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Blood-Stained Machete, Blindfolded Man: Vijay Sethupathi–Puri Jagannadh’s ‘Slum Dog’ Sparks Curiosity Ahead of Teaser Release!
One of the most anticipated collaborations in Indian cinema, Slum Dog: 33 Temple Road, starring Vijay Sethupathi and directed by Puri Jagannadh, is steadily building excitement among audiences across the country.
Ever since its title announcement and first-look reveal, the pan-India action drama has generated significant buzz. Taking the promotional campaign to the next level, the makers have now officially announced that the film’s teaser will be released on June 8.
The newly unveiled teaser poster has quickly become a talking point on social media. Featuring a blindfolded man with a blood-stained machete pressed against his neck, the striking visual hints at a dark, violent, and emotionally intense world. The poster raises several intriguing questions — Who is the man? What fate awaits him? — further fueling curiosity around the film.
Known for consistently choosing unconventional roles, Vijay Sethupathi is expected to showcase yet another powerful and unique performance. Meanwhile, Puri Jagannadh, celebrated for his mass-action entertainers, is believed to be presenting a fresh narrative style that could offer audiences a completely different cinematic experience.
Actress Samyuktha plays the female lead, while veteran actress Tabu and Kannada star Duniya Vijay portray pivotal roles that are expected to add considerable depth to the story. The ensemble cast also includes Brahmaji, VTV Ganesh, and several other notable actors.
The film’s music is composed by National Award-winning composer Harshavardhan Rameshwar, whose impactful work in films such as Arjun Reddy and Animal earned widespread acclaim for its intensity and emotional resonance.
With shooting now completed, post-production work is progressing rapidly across all five language versions — Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi.
Produced by Puri Jagannadh and Charmme Kaur under the Puri Connects banner, in association with JB Narayan Rao Kondrolla’s JB Motion Pictures, the film is gearing up for a grand pan-India release.
Blending mystery, action, emotion, and unexpected twists, Slum Dog: 33 Temple Road promises to deliver a gripping cinematic experience. As the teaser release approaches, fans are eagerly waiting to get their first glimpse into the film’s intriguing world.
