ரத்தக்கறை படிந்த அரிவாளும்… கண்கள் கட்டப்பட்ட மர்ம மனிதரும்! ‘ஸ்லம் டாக்’ டீசருக்கு முன்பே பரபரப்பை கிளப்பிய விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணி!
ரத்தக்கறை படிந்த அரிவாளும்... கண்கள் கட்டப்பட்ட மர்ம மனிதரும்! ‘ஸ்லம் டாக்’ டீசருக்கு முன்பே பரபரப்பை கிளப்பிய விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணி!
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலக ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக மாறியுள்ளது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்துள்ள ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம்.
படத்தின் டைட்டில் அறிவிப்பிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பான்-இந்தியா திரைப்படம் தற்போது அதன் அடுத்த கட்ட புரமோஷன் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டீசர் வெளியீட்டு அறிவிப்புடன் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் பே...
