

நடிகர் அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருபவர் போனி கபூர். இதை அடுத்து பெரிய பட்ஜெட்டில் கமர்சியல் ஆக்ஷன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில் அஜீத் உடன் மூன்று படங்கள் பணியாற்றி ஒப்பந்தம்தயாரிப்பாளர் போனி கபூர் ஒப்பந்தம் செய்து உள்ளதாக செய்திகள் பரவியது. இந்த தகவல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள போனி கபூர், அஜீத் உடன் மூன்று படங்களில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யவில்லை என்றும், நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் பெயரிடப்படாத ஒரு படம் மட்டும் அஜீத் உடன் பணியாற்ற உள்ளேன். அதை தொடர்ந்து ஹிந்தி படங்களை தயாரிக்க உள்ளேன் என்றார்.
