Thursday, May 21
Shadow

பவன் கல்யாண் முன்னிலையில் பிரம்மாண்டமாக துவங்கிய சிரஞ்சீவி – பாபி கொல்லி படம்… நாளை முதல் ரெகுலர் ஷூட்!

பவன் கல்யாண் முன்னிலையில் பிரம்மாண்டமாக துவங்கிய சிரஞ்சீவி – பாபி கொல்லி படம்… நாளை முதல் ரெகுலர் ஷூட்!

தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய கூட்டணிகளில் முக்கியமானதாக மாறியுள்ளது ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி இணையும் புதிய திரைப்படம். ‘வால்டர் வீரய்யா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி, தற்போது #ChiruBobby2 / #Chiru158 என்ற தற்காலிக தலைப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதால் விழா ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக மாறியது. ஒரே மேடையில் மூன்று ‘மெகா’ நட்சத்திரங்கள் தோன்றிய தருணம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

படத்தின் முதல் கிளாப்பை பவன் கல்யாண் அடித்து தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெலா கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை இயக்குநர் வி.வி.விநாயக் மேற்கொண்டார். மேலும் மூத்த இயக்குநர்களான பி.கோபால், கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கி வாழ்த்தினர்.

பெரிய அளவிலான கமர்ஷியல் திரைப்படங்களை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கும் திறன் கொண்ட இயக்குநர் பாபி கொல்லி, இந்த முறை இன்னும் அதிக ‘மாஸ்’ அம்சங்களும், அதிரடி காட்சிகளும் நிறைந்த கதையை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவியும் இந்த படத்திற்காக தனது தோற்றத்தில் மாற்றம் கொண்டு வர தீவிரமாக தயாராகி வருகிறார். அண்மையில் வெளியான அவரது ஜிம் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு வலுவான அணியொன்று இணைந்துள்ளது. எஸ். தமன் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா கவனிக்கிறார். ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி இணைந்து திரைக்கதை எழுதியுள்ள நிலையில், ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி கூடுதல் திரைக்கதை பணிகளை மேற்கொண்டுள்ளனர். நகைச்சுவை வசனங்களை பானு – நந்து கூட்டணி எழுதியுள்ளது.

படத்தின் ரெகுலர் படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், சிரஞ்சீவி ரசிகர்களுக்கு இன்னொரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chiranjeevi – Bobby Kolli’s Mega Project Launched Grandly in the Presence of Pawan Kalyan; Regular Shoot Begins Tomorrow!

One of the most anticipated collaborations in Telugu cinema right now is undoubtedly the reunion of Megastar Chiranjeevi and director Bobby Kolli. After the blockbuster success of Waltair Veerayya, the duo has teamed up once again for a massive new entertainer, tentatively titled #ChiruBobby2 / #Chiru158.

Produced by KVN Productions, the film was officially launched today with a grand pooja ceremony in Hyderabad. The event turned into a celebration for fans as Power Star Pawan Kalyan and Nagababu attended as chief guests. The sight of the three mega stars sharing the stage together created huge excitement among fans and industry circles alike.

Pawan Kalyan sounded the clapboard to mark the beginning of the film, while Sushmita Konidela switched on the camera. Director VV Vinayak directed the first shot ceremonially. Veteran filmmakers B Gopal and Kodandarami Reddy, along with Nagababu, handed over the script to the makers and conveyed their best wishes.

Known for delivering commercial entertainers that connect strongly with the masses, director Bobby Kolli is said to have crafted an even bigger and more intense story this time, packed with large-scale action and mass elements. Chiranjeevi, too, is undergoing a striking transformation for the film. His recently released gym workout video had already gone viral on social media, giving fans a glimpse of the dedication he is putting into the project.

Malayalam actress Anaswara Rajan has been roped in for a pivotal role in the film. The project also features a strong technical crew. S Thaman is composing the music, while Vijay Karthik Kannan handles cinematography. Production design is by Avinash Kolla, and editing is being taken care of by Antony Ruben.

The screenplay has been written by Kona Venkat and K Chakravarthy Reddy, with additional screenplay support from Hari Mohana Krishna and Vineeth Potluri. The comedy dialogues are penned by the successful writer duo Bhanu–Nandu.

The regular shoot of the film is set to commence tomorrow in Hyderabad. Mounted on a grand scale, the film is expected to be a complete festive treat for Chiranjeevi fans.