பவன் கல்யாண் முன்னிலையில் பிரம்மாண்டமாக துவங்கிய சிரஞ்சீவி – பாபி கொல்லி படம்… நாளை முதல் ரெகுலர் ஷூட்!
பவன் கல்யாண் முன்னிலையில் பிரம்மாண்டமாக துவங்கிய சிரஞ்சீவி – பாபி கொல்லி படம்... நாளை முதல் ரெகுலர் ஷூட்!
தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய கூட்டணிகளில் முக்கியமானதாக மாறியுள்ளது ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி இணையும் புதிய திரைப்படம். ‘வால்டர் வீரய்யா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி, தற்போது #ChiruBobby2 / #Chiru158 என்ற தற்காலிக தலைப்பில் உருவாகும் புதிய படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதால் விழா ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாக மாறியது. ஒரே மேடையில் மூன்று ‘மெகா’ நட்சத்திரங்கள்...
