Saturday, April 18
Shadow

கோமாளி அனைவரையும் கவரும்: ஜெயம் ரவி பேச்சு

நடிகர் ஜெயம்ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, தயாரிப்பாளர் ஐசரி கே கணேசன், இயக்குனர் பிரதீப் ரன்குனாதன் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோமாளி படத்தின் மூலம் பல்வேறு படிப்பினை மற்றும் அனுபவத்தை பெற்றுள்ளோன். இந்த படத்தை தேர்வு செய்தது போன்றே, அடங்க மறு படத்தையும் தேர்வு செய்தேன். இந்த படத்தை நான் தேர்வு செய்ததற்கான காரணத்தை நீங்கள் படம் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

இந்த படத்திற்காக டாக்டர் ஐசரி கே கணேஷன் சார்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர் எனது அப்பா போன்றவர்; குழந்தை மனசு கொண்ட அவர் கடுமையான் உழைப்பாளி. எனது கனவே வேல் பிலிம் எண்ட்டர்நேசனல், ஏவிஎம் போன்ற மாற வேண்டும். இந்த நிறுவனத்தின் பல படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களை தற்போது ஆவணப்படுத்தி காட்டி விட முடியாது. அவர்கள் 90 மற்றும் 20-களில் படங்களை தயாரித்துள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் தண்ணீர் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் என்று அந்த கால படங்களில் காமடியாக எடுக்கப்பட்ட சீன்கள் தற்போது உண்மையாக மாறியுள்ளது.

மனிதநேயமே கோமாளி படத்தின் கதை கரு. இந்த மனிதநேயம் மட்டுமே நாம் அனைவரயும் ஒன்றிணைக்கிறது. தயாரிப்பாளர் பிரதீப் ரங்கநாதன், எந்த விஷயத்திலும் விட்டு கொடுக்க மாட்டார். இதனாலே பெரிய அளவில் பிரபலமாகி உள்ளதோடு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இவர் எனக்கு சகோதார் போன்றவர் என்றாலும், அவர் என்னை தனது மகன் போலவே பார்க்கிறார்.

காஜல் அகர்வால், சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகை, இவர் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். சம்யுக்தா ஹெக்டே, இவர் லேடி பிரபுதேவா போன்றவர் இவர் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஷா ரா மறக்க முடியாத பணிகளை செய்துள்ளார். கண்டிப்பாக கோமாளி படம் அனைவரையும் கவரும் என்பதுடன், படம் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்ற பின்னரும் இது குறித்து நினைக்க வைக்கும் என்றார்.