கோமாளி அனைவரையும் கவரும்: ஜெயம் ரவி பேச்சு
நடிகர் ஜெயம்ரவி மற்றும் காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடித்த ஜெயம்ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, தயாரிப்பாளர் ஐசரி கே கணேசன், இயக்குனர் பிரதீப் ரன்குனாதன் மற்றும் பலர் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கோமாளி படத்தின் மூலம் பல்வேறு படிப்பினை மற்றும் அனுபவத்தை பெற்றுள்ளோன். இந்த படத்தை தேர்வு செய்தது போன்றே, அடங்க மறு படத்தையும் தேர்வு செய்தேன். இந்த படத்தை நான் தேர்வு செய்ததற்கான காரணத்தை நீங்கள் படம் பார்க்கும் போது புரிந்து கொள்வீர்கள்.
இந்த படத்திற்காக டாக்டர் ஐசரி கே கணேஷன் சார்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவர் எனது அப்பா போன்றவர்; குழந்தை மனசு கொண்ட அவர் கடுமையான் உழைப்பாளி. எனது கனவே வேல் பிலிம் எண்ட்டர்நேசன...
