Friday, November 7
Shadow

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்த தின பதிவு

யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.

2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.[4]
ஷில்பாவை விவாகரத்து செய்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.