Friday, January 17
Shadow

இயக்குனர் கே நட்ராஜ் பிறந்த தின பதிவு

கே.நடராஜ் – இயக்குநர் மற்றும் நடிகர். அன்புள்ள ரஜனிகாந்த், வள்ளி, செல்லக்குட்டி, தலையாட்டி பொம்மை, இரண்டு மனம், செல்வி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இராணுவ வீரன், பொல்லாதவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ரஜனிகாந்தின் நெருங்கிய நண்பர்.திரைப்படக் கல்லூரியில் இருவரும் ஒன்றாக பயின்றவர்கள்.

”அன்புள்ள ரஜனிகாந்த்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நட்ராஜ். இவர் ஒரு நடிகராகத்தான் திரைத்துறைக்குள் நுழைந்தார். “மூன்று முடிச்சு” படத்தில் ரஜினிகாந்தின் மனசாட்சியாக ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்த இவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய நடிப்புக் கல்லூரியில் பயின்று டிப்ளமோ பெற்றவர்.

”1973 – 74 ஆம் ஆண்டு நடிப்புக் கல்லூரியில் இவரும் ரஜினிகாந்தும் ஒன்றாகப் படித்தவர்கள். பயிற்சிக்குப் பிறகு ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெறத் துவங்கினார். இவர் பயின்ற அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்ற ஆரம்பித்தார். “மூன்று முடிச்சு” படத்தின் மூலம் அறிமுகமான இவரும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இடையில் ஃபிலிம் சேம்பர் நடத்தி வந்த நடிப்புப் பயிற்சி நிறுத்தப்பட்டதும் இவ்ர் தேவர் பிலிம்ஸில் பணியாற்றினார். “அதிசயப்பிறவிகளிலிருந்து” “அபூர்வ சகோதரிகள்” படம் வரை இவர் உதவி இயக்குநராக இருந்துள்ளார். கே.பாலசந்தரின் “மூன்று முடிச்சு”, “நிழல் நிஜமாகிறது” போன்ற படங்களில் இவர் நடித்தபோது ., அவரது தொழில் நுட்பத் திறமைகளையும், பணியாற்றும் விதத்தையும் கூர்ந்து கவனித்து இவரது திறமையை வளர்த்து கொண்டார். ரஜினிகாந்தும், தூயவனும் கொடுத்த ஊக்கத்தாலும் ஆதரவாலும் ஒரு முழுமையான இயக்குநராக இவரை வெளிப்படுத்திக் கொள்ளமுடிந்தது.