Friday, March 29
Shadow

விக்ரம் வேதாவுக்கும், விஸ்வாசம் படத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா?

விஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் – சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அனுஷ்கா, ஆத்மிகா உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிப்பதால், அவருக்கு ஏற்ற ஜோடியை படக்குழு தேடி வருகிறது. இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித் தாதாவாக நடிப்பதாகவும் மற்றொரு தகவல் உலா வருகிறது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நாயகி யார், வில்லன் யார், மற்ற கலைஞர்கள் யார், யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply