
தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணி தான் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும் அப்படி அமைந்த கூட்டணி மிக பெரிய வெற்றி படங்களை தொடர்ந்து கொடுப்பார்கள் அப்படியான ஒரு கூட்டணி தான் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இவர்கள் படைப்பு எல்லாமே உலக தரமான படங்களாக தான் அமைந்துள்ளது அதோடு மிக பெரிய வெற்றிபடங்கலாகவும் அமையும் அந்த வகையில் இந்த கூட்டனி மீண்டும் அமைந்துள்ளது அதுவும் தனுஷ்க்கு வித்தியாசமான கதபாதிரங்களோடு அதுஎனும் வும் இரட்டை வேடத்தில் ஒரு வேடம் என்றாலே மிகவும் அசத்தலாக இருக்கும் இந்த முறை இரட்டை வேடமாம் சொல்லவாவேணும்.
வட சென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிக் கூட்டணியான நடிகர் தனுஷும், இயக்குநர் வெற்றி மாறனும் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அசுரன்’. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
‘வெக்கை’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில், மலையாளத்தின் பிரபல நடிகையான மஞ்சு வாரியார் நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான். இந்தப் படத்திலும் மிகுந்த சிரத்தை எடுத்து நடிக்கும் நடிகர் தனுஷ், படத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே படத்துக்காக இரு போஸ்டர்களை வெளியிட்டிருக்கும் படத் தயாரிப்புக் குழு, இப்போது படம் குறித்து புதிய தகவல் ஒன்றை கசிய விட்டுள்ளது. படத்தில், நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதுதான் அந்தத் தகவல். ஏற்கனவே ‘கொடி’ படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும், அசுரன் படத்தில் அவருக்கான இரட்டை வேடம் சிறப்பானதாக இருக்கும் என கூறுகின்றனர்.
