Friday, September 30
Shadow

தனுஷுக்கு ரசிகர்கள் தரும் தீபாவளி பரிசு

வெற்றிமாறன் தயாரிப்பில் தனுஷ் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் ‘கொடி’. இப்படத்தில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளனர். வரும் தீபாவளிக்கு வெளிவரும் இப்படத்திற்கு தனுஷின் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி என்று படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உண்மையிலேயே தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது. அந்த மாதிரியான ஒரு சம்பவம் விரைவில் நடைபெறவிருக்கிறது. ஆம், இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் தனுஷ், திரிஷா, பாடலாசியர் அருண் ராஜா காமராஜா, காளி வெங்கட் ஆகியோர் தமிழகத்தில் முக்கிய நகரங்களான சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவிருக்கின்றனர்.

வருகிற அக்டோபர் 25, 26 ஆகிய இரு தேதிகளிலும் இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் பயணமாகி, ‘கொடி’ படத்தை விளம்பரப்படுத்தவுள்ளனர். இந்நிலையில், வருகிற 26-ந் தேதி நெல்லைக்கு வரும் தனுஷுக்காக அவரது ரசிகர்கள் ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கவுள்ளனர்.

நெல்லையின் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து தனுஷ் இப்படத்தை கண்டுகளிக்கவுள்ளார். தனுஷ் அவரது ரசிகர்களுக்கு இந்த தீபாவளியை இரட்டை தீபாவளியாக கொடுக்க நினைத்தார். ஆனால், அவரது ரசிகர்கள் அவருக்கே இரட்டை தீபாவளி கொடுக்கவுள்ளனர்.

Leave a Reply