Tuesday, February 11
Shadow

தனுஷ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார்?

‘மாரி 2’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் முதல்கட்டப் பணிகளை, ‘மாரி 2’ படப்பிடிப்புக்கு இடையே கவனித்து வருகிறார் தனுஷ். தெலுங்கில் நாகார்ஜுனாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் சுதீப்பையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதற்கான தனுஷ் – சுதீப் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. சுதீப் நாயகனாக நடிக்கவுள்ளாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா என்பது குறித்த தகவல், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போதே தெரியவரும். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘மாரி 2’ படத்தில் சாய் பல்லவி, ரோபோ சங்கர் ஆகியோருடன் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.