
தனுஷ் தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்று சொல்லும் அளவுக்கு திறமை வாய்ந்த நடிகர் மட்டும் இல்லை பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி சாதித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் அசுரன் படபிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்.ஆனால் இவே தற்போது முக்கிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.
நடிகர் தனுஷ், போலி ஆவணம் மூலம், உயர் நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு பெற்றதாகவும், போலீசார் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரியும் தாக்கலான வழக்கில், தனுஷுக்கு, நோட்டீஸ் அனுப்ப, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை, மேலுாரைச் சேர்ந்த, கதிரேசன் – மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ், எங்கள் மகன். அவர் எங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என, மேலுார் நீதிமன்றத்தில், மனு செய்தனர். தனுஷ், நான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.
கடந்த, 2017ல் தனி நீதிபதி விசாரித்து, இவ்வழக்கில் முகாந்திரம், ஆதாரங்கள் இல்லை. மேலுார் நீதிமன்றத்தில், கதிரேசன் தம்பதி தாக்கல் செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.
கதிரேசன், போலியான பிறப்புச் சான்று, கல்விச் சான்று, ரேஷன் கார்டு சமர்ப்பித்து, உயர் நீதிமன்றத்தில், தனுஷ் சாதகமான உத்தரவு பெற்றுள்ளார். தனுஷ் மீது, மதுரை புதுார் போலீசில், 2017 அக்., 5ல் புகார் அளித்தேன். வழக்குப் பதிய உத்தரவிட வேண்டும் என, மதுரை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார். தனுஷ், புதுார் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, சாமுண்டீஸ்வரி பிரபா, விசாரணையை, பிப்., 13க்கு ஒத்திவைத்தார்.
