
போலி ஆவண வழக்கு தனுஷ்க்கு கோர்ட் நோட்டீஸ் சிக்குவார தனுஷ்
தனுஷ் தமிழ் சினிமாவின் சகலகலாவல்லவன் என்று சொல்லும் அளவுக்கு திறமை வாய்ந்த நடிகர் மட்டும் இல்லை பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி சாதித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் அசுரன் படபிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்.ஆனால் இவே தற்போது முக்கிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.
நடிகர் தனுஷ், போலி ஆவணம் மூலம், உயர் நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு பெற்றதாகவும், போலீசார் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரியும் தாக்கலான வழக்கில், தனுஷுக்கு, நோட்டீஸ் அனுப்ப, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை, மேலுாரைச் சேர்ந்த, கதிரேசன் - மீனாட்சி தம்பதி, நடிகர் தனுஷ், எங்கள் மகன். அவர் எங்களுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என, மேலுார் நீதிமன்றத்தில், மனு செய்தனர். தனுஷ், நான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, உயர் நீதிமன...