தமிழ் சினிமாவின் பாரம்பரிய குடும்பம் என்றால் அது சிவாஜி கணேசன் குடும்பம் என்று சொல்லலாம் இந்த குடும்பத்தின் இரண்டாவது தலைமுறை தான் இளையதிலகம் பிரபு இவர் தமிழ் சினிமாவுக்கு தடம் பதித்து 34 வருடங்கள் ஆகிறது ஆம் 34 வருடங்கள் முன் ஏப்ரல் 14ம்தேதி தான் இவர் நடித்த முதல் படம்  சங்கிலி படத்தின் படபிடிப்பு ஆரம்பமானது அதே போல நேற்று இவரது 225 வது படம் காலேஜ் குமார் படத்தின் படபிடிப்பு நேற்று ஆரம்பமானது.

 

இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக மதுபாலா நீண்ட இடைவேளுக்கு பின் இணைகிறார். இந்த படத்தில் புதுமுகங்கள் ஹீரோ ராகுல் விஜய் இவருக்கு ஜோடியாக பிரியா என்ற புதுமுக நாயகியும் அறிமுகமாகிறார் . இந்த படத்துக்கு இசை காசிப் இசையமைக்கிறார் .இவர் ஏ.ஆர்.ரகுமான் சீடர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் . இந்த படத்துக்கு பல படங்களுக்கு கதை திரைகதை எழுதிய ஆர்.கே. வித்தியாதரன் கதை வசனம் எழுதுகிறார் . அறிமுக இயக்குனர் ஹரி சந்தோஷ் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப்படத்தின் நாயகன் கன்னட படத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமழில் இந்த படம் அவருக்கு அறிமுகம் இந்த படத்தை எல்.பத்மநாபன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் முழுக்க இது ஒரு கல்லுரி காதல் கதையாம் இந்த படத்தின் துவக்க விழா நேற்று மிக பிரமாண்டமாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில நடந்தது

Related