Saturday, September 5
Shadow

‘தர்மன்’ அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் – ரஜினிகாந்த் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை, ஆகஸ்ட் 14, 2026:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘தர்மன்’ திரைப்படம், அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவின் முன்னணி படைப்பாளிகள் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணியாக உருவாகி வருகிறது. இளம் தலைமுறையின் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கு அன்பறிவ் இரட்டையர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

முதல் கட்டப் படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது தொடங்கியுள்ள இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மூலம் ‘தர்மன்’ படத்தின் தயாரிப்புப் பணிகள் மேலும் வேகம் பெற்றுள்ளன. ரஜினிகாந்தின் திரை ஆளுமையுடன் அஸ்வத் மாரிமுத்துவின் வித்தியாசமான இயக்கப் பார்வையும், அனிருத்தின் இசையும், அன்பறிவின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளும் இணைவதால், இப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், படப்பிடிப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கேமரா மீண்டும் சுழலத் தொடங்கியுள்ள நிலையில், ‘தர்மன்’ திரைப்படம் தனது அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

ரஜினிகாந்த் – அஸ்வத் மாரிமுத்து – அனிருத் – அன்பறிவ் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணியின் ‘தர்மன்’, அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு பணிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

‘DHARMAN’ Moves Into Its Next Phase as Second Schedule Begins

Chennai, August 14, 2026:

The much-awaited film ‘DHARMAN’, starring Superstar Rajinikanth in the lead, has entered its next phase of production. Following the successful completion of the first schedule, the team commenced the second schedule yesterday, marking another important milestone in the film’s journey.

Headlined by Superstar Rajinikanth, ‘DHARMAN’ brings together an exciting combination of some of the most celebrated names in Indian cinema. The film is directed by filmmaker Ashwath Marimuthu, with Anirudh Ravichander composing the music and the acclaimed action duo Anbariv choreographing the film’s action sequences.

With the first schedule successfully wrapped, the commencement of the second schedule has added further momentum to the production. The combination of Rajinikanth’s screen presence, Ashwath Marimuthu’s distinctive directorial vision, Anirudh’s music and Anbariv’s high-energy action is already creating considerable anticipation among moviegoers.

As the cameras begin rolling once again, ‘DHARMAN’ moves into its next chapter, promising an ambitious cinematic experience that brings together a powerful blend of star power, storytelling, music and action.

The film is jointly produced by Kamal Haasan and R. Mahendran under the banners of Raajkamal Films International and Turmeric Media.

With the Rajinikanth–Ashwath Marimuthu–Anirudh Ravichander–Anbariv combination coming together for the first time, expectations surrounding ‘DHARMAN’ are set to rise further as the film progresses towards its next stages of production.