
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு பல கட்டங்களில் ஆதரவாக செயல்பட்டவரும், கலைத்துறையினராலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் இவர், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படத் துறையில் தொழிலாளர்களின் நலனுக்காக பல சங்கங்களில் பொறுப்புகளில் பதவி வகித்து வருகிறார். இதுமட்டுமின்றி தனம் படத்தை இயக்கியுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர், தற்போதைய அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றத்தின் தலைவர் பதவிகளை வகித்து வருகிறார். மேலும் இவர் தமிழின போராட்டங்களான நெய்வேலி மற்றும் ராமேஸ்வரம் போராட்டங்கள் போன்று பல்வேறு தமிழின போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார். திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் தலைமையில் திரு. சீமான், திரு.R. K. செல்வமணி, ஆகியோரோடு தமிழினத்திற்காக தமிழ்நாடு முழுக்க பரப்புரையில் ஈடுபட்டவர் இவர்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்சி) கீழ் 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் தலைமை அமைப்பாக பெப்சி செயல்படுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். இதில் 23 சங்கங்களைச் சேர்ந்த 63 நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி.சிவா 49 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இயக்கிய படம்
தனம்
