Saturday, June 27
Shadow

தமிழில் கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் ராஷ்மிகா

கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடித்து வந்தார். சாலோ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து முன்னணி நடிகை ஆனார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பொகரு, பீஷ்மா படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் படங்களில் நடிக்கிறார் அதுவும் விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் பரவலாக பரவியது அது மட்டும் இல்லாமல் முன்னணி பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளியான ஆனால் அது கடைசியில் வெறும் வதந்து யாக போனது  ஆனால் அவருக்கு தமிழ் நடிகை ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது அது ஒரு வழியாக கார்த்தி படத்தில் நடக்கிறது

இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தேவ் படத்திற்கு பிறகு கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில், கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.